அதே நேரம் நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழாவின் போது ஊடகங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பிலும் அறிவுறுத்தலினையும் யாழ்.மாநர சபை விடுத்துள்ளது.
• நல்லூர் கந்தசுவாமி கோவில் பெருந்திருவிழாவின் போது ஊடகப் பணி செய்யும் ஊடகவியலாளர்கள் வேட்டியுடன் ஆசார சீலர்களாக பணி செய்தல் வேண்டும்.
• யாழ்.மாநகர சபையினால் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊடக அனுமதியடையினை கழுத்துப்படியுடன் அணிந்தவாறு மட்டுமே ஊடகப்பணியில் ஈடுபட முடியும்
• முருகப் பெருமான் வீதியுலா வரும் நேரத்தில் ஊடகப் பணி செய்யும் ஊடகவியலாளர்கள் மேலங்கியுடன் நிற்றல் ஆகாது.
• ஊடகவியலாளர்கள் Drone Camera மற்றும் தன்னியக்க இயந்திரங்ளைப் சுற்றுவீதியில் பாவித்தல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
• முருகப் பெருமான் வீதியுலா வரும் நேரத்தில் இருக்கைகளில் அமர்ந்த வாறு ஒளிப்பதிவுகளை மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
• முருகப் பெருமான் வீதியுலா வரும் நேரத்தில் நேரலையினை மேற்கொள்ளுகின்ற ஒளிபரப்பு நிறுவனங்கள் ( உயர்ந்த இடத்தில் இருந்து) கோயில் வளாகத்தில் கட்டப்பட்டிருக்கும் சிவப்பு வெள்ளை சீலைக்கு வெளியிருந்தே ஒளிப்பதிவுகளைச் செய்ய வேண்டும்.
• ஒலி வர்ணணைகளின் போது ஆலயம் சம்பந்தமான உண்மையான விடயங்களை மட்டும் தெரிவிக்கவேண்டும். மாறாக ஆலயத்தை பற்றி மிகைப்படுத்தி கூறுவதற்காக உண்மைக்கு புறம்பான விடயங்களை தெரிவிப்பதனை தவிர்த்துக் கொள்ளவும்.
• முருகப் பெருமானைத் தரிசிக்கும் பக்தர்களுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் பக்தர்களின் தலை மட்டத்திற்கு மேல் கமரா ஸ்ரான்ட் உயர்த்தி படப்பிடிப்பதனை தவிர்க்க வேண்டும்.
• மாநகரசபை உத்தியோகத்தர்களுக்கும் பாதுகாப்பு பிரிவினருக்கும் ஆலய பணியாளர்களுக்கும் இடையூறு வழங்காமல் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
• தங்களது ஊடக பணியின் போது ஆலயத்திற்கு வரும் எவரையும் தனிப்பட்ட முறையில் பாதிக்காதவாறு செயற்படுவதனை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
