எரிபொருள் விலை தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி ..!

இன்று இரவு 10 மணி முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளைக் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒக்டேன் 92 ரக பெற்றோல் 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 450 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு 540 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், டீசலின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 440 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சுப்பர் டீசல் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு 510 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  
புதியது பழையவை