முட்டை விலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம்

முட்டை விலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக இவ்வாறானதொரு  நிலை ஏற்பட்டுள்ளதாக  குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், கால் நடைத் தீவனத்தை பெற்றுக்கொள்வதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நாட்டில் தற்போது முட்டை பாவனை மேலும் அதிகரித்துள்ளதாக  குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், எதிர்காலத்தில் முட்டை ஒன்றின் விலை 55 ரூபாவாக அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை