ஐரோப்பியாவில் முதற்தடவையாக monkeypoxவைரஸ் மரணம் பதிவாகியுள்ளது.
ஸ்பெய்னில் குறித்த மரணம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்பெய்னில் இதுவரை 4ஆயிரத்து ,298 பேர் monkeypoxவைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அவசர மற்றும் எச்சரிக்கை ஒருங்கிணைப்பு மையம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
monkeypoxவைரஸ் தொற்று உலகளாவிய சுகாதார அவசரநிலையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
