வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா இன்றைய தினம் காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இன்று காலை 9 மணி முதல் பூர்வாங்க கிரியைகள் ஆரம்பமாகி இடம்பெற்ற நிலையில் காலை 10 மணிக்கு கொடியேற்றம் இடம்பெற்றிருந்தது.
தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவம் இடம்பெறவுள்ளதுடன், மஞ்சள்திருவிழா எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ளது.

