‘பொலித்தீன் பாவனை அற்ற நாடு வளமான தேசம்’ எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலித்தீன் பாவணையினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்பூட்டும் வேலைத்திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கான சிகரம் அமைப்பினால் முன்னொடுக்கப்பட்டது.
அனர்த்த ஆபத்து குறைப்பு செயற்பாடுகளை மேம்படுத்தலும் சுற்று சூழல் தொகுதியை பாதுகாத்தலும் எனும் செயற்றிட்டத்திற்கு அமைவாக மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்புடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வை.எம்.சீ.ஏ சமூக நிறுவனம் மற்றும் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் ஓட்டமாவடி,வாழைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் பொலித்தீன் பாவணையினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்பூட்டும் வகையில் மாற்று திறனாளிகள் நடைபவனியில் ஈடுபட்டனர்.
விழிப்பூட்டல் செயற்பாடுகளில் பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன், சுவரொட்டிகளும் ஓட்டப்பட்டப்பட்டன.
சிகரம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் என்.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற இவ் விழிப்பூட்டும் செயற்பாடுகளில் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர்,சட்டத்தரணி ஹபீப் றிபான் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிகரம் அமைப்பின் அங்கத்தவர்கள்,பிரதேச சபை ஊழியர்கள் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.