போரதீவுப்பற்று பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (29)காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வெல்லாவெளி-அம்பிளாந்துறை பிரதான வீதியில் பழுகாமம்  சந்தியின் வளைவு பகுதியில் இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

பாலையடிவட்டையிலிருந்து கடுக்காமுனை நோக்கி நேற்று (28)இரவு 7.30 மணிக்கு சென்ற பாலையடிவட்டை 37ஆம் கிராமத்தை சேர்ந்த, மூன்று பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய திருச்செல்வம் ரிசிகரன் என்பவரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த வளைவு பகுதியில் வேகமாகச்சென்று விபத்து இடம்பெற்றிருக்கலாம் என தெரிவித்துள்ள பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேபோன்று ஸ்தலத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவு பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

புதியது பழையவை