நாட்டில் டெங்கு நோய் பரவல் சடுதியாக அதிகரிப்பு

நாட்டில் டெங்கு நோய் பரவல் சடுதியாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நாட்டில் 20 முதல் 45 வயதுக்குட்பட்ட 55 வீதமானவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாடசாலை மாணவர்களில் 25 வீதமானோர் உள்ளடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த மூன்று நாட்களில் 806 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக டெங்குநோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
புதியது பழையவை