இலங்கையில் கொரோனா தொற்றுக்கு மேலும் 7 பேர் பலியாகியுள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(01) இந்த இறப்புக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டில் இதுவரை பதிவான கொவிட் இறப்புக்களின் மொத்த எண்ணிக்கை 16,566 ஆக அதிகரித்துள்ளது.
