நன்கொடை மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்குவதில் உலகின் முன்னணி இலாப நோக்கற்ற நிறுவனங்களில் ஒன்றான Americares, இலங்கை மக்களுக்கு அவசரமாகத் தேவைப்படும் மருத்துவப் பொருட்களை 773,000 அமெரிக்க டொலருக்கு மேல் நன்கொடையாக வழங்கியுள்ளது.
இலங்கைத் தூதரகத்தின் கோரிக்கைக்கு அமைய, தூதுவர் மஹிந்த சமரசிங்கவின் பணிப்புரையின் கீழ் இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த நன்கொடையானது, மகப்பேறுக்கு முந்தைய மற்றும் பாலூட்டும் தாய்மாருக்கான விற்றமின்கள், நாற்பட்ட நோய்க்கான மருந்துகள், இன்ட்ராவாஸ்குலர் வடிகுழாய்கள், சிரிஞ்ச்கள் மற்றும் கையுறைகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளைக் கொண்டுள்ளது.
இவ்வாறான செயலை எளிதாக்குவதன் விளைவாக, எதிர்கால நன்கொடைகளை வழங்குவதற்கு உதவும் வகையில் இலங்கை மற்றும் அமெரிக்காவிலுள்ள சுகாதார அமைச்சுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் முறையான சான்றிதழ் கையளிக்கும் நிகழ்வில், தூதுவர் மகிந்த சமரசிங்க மற்றும் Americaresக்கான அமெரிக்க உதவி மருத்துவ அதிகாரி சாதனா ராஜமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.