மட்டு ஏறாவூரில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை முன்னெடுப்பு
Vhg
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்று(29) வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இன்றைய தினம் மட்டக்களப்பு ஏறாவூர் மணிக்கூடு கோபுரத்தடியில் மக்களின் பேராதரவுடன் இடம்பெற்றது.
பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் காங்கேசன்துறை முதல் ஹம்பாந்தோட்டை வரையில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.