மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் சம்மேளனம்,மாவட்ட பெண்கள் அமைப்புகள் ,மாதர் சங்கங்கள் ,மாவட்ட பெண்கள் ஒன்றியம் ஆகியன இணைந்து பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறைகளுக்கு தொடர்பாக கண்டனம் தெரிவிக்கும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று மட்டக்களப்பு நகரில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அண்மையில் தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் ஒருவரினால் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளரை அவமதிக்கும் வகையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு எதிராக கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினருக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.


புதியது பழையவை