அரிசி ஏற்றிச் சென்ற லொறி வீட்டின் மீது கவிழ்ந்து விபத்து

நுவரெலியாவில் இருந்து பதுளை நோக்கி அரிசி ஏற்றிச் சென்ற லொறி ஒன்று நுவரெலியா – பதுளை பிரதான வீதியின் ஹக்கல பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

லொறியில் பயணித்த சாரதி படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலன்னறுவையில் இருந்து வெலிமடை பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளில்  உள்ள மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு அரிசி விநியோகிப்பதற்காக பயணித்த குறித்த லொறி செங்குத்தான பகுதியில் பிரதான வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லொறி கவிழ்ந்ததில் வீடொன்றுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், லொறி கவிழ்ந்த போது வீட்டினுள் யாரும் இருக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இயந்திரக் கோளாறு காரணமாக இவ் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை