பாணந்துறை சுற்றுலா ஹோட்டலில் - திருமண நிகழ்வில் கடும் மோதல்

பாணந்துறை சுற்றுலா ஹோட்டலில் நேற்று (17) நடைபெற்ற திருமண நிகழ்வின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மணமகன் தரப்பில் இருந்து வந்த கண்டி மற்றும் கடுகண்ணாவ பிரதேசவாசிகள் குழுவொன்றே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் போது தாக்கப்பட்ட ஹோட்டல் பணியாளர்கள் 5 பேரும் மலர் அலங்காரம் செய்ய வந்த ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீச்சல் குள சேவைக்கு முன்பதிவு செய்யப்படாத போதிலும், மது அருந்திவிட்டு சிலர் அங்கு இறங்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்களை கைது செய்ய பெரும் முயற்சி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
புதியது பழையவை