மட்டக்களப்பு போக்குவரத்து பொலிஸாரினால் துவிச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர்கள் ஒட்டல்

மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பொலிஸாரினால் துவிச்சக்கர வண்டிகளுக்கு ஒளியூட்டக்கூடிய ஸ்டிக்கர்களை ஒட்டும் பணிகள் நேற்று பிற்பகல் முன்னெடுக்கப்பட்டது156வது பொலிஸ் தின நிகழ்வை முன்னிட்டு நடைபெற்று வரும் நிகழ்வுகளில் ஒன்றாக இச்செயற்பாடு அமைத்திருந்தது.

தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் போக்குவரத்து பொலிஸார் இணைந்து துவிச்சக்கர வண்டிகளுக்கு இவ் ஸ்டிக்கர் ஒட்டும் பணியினை முன்னெடுத்திருந்தனர்.
புதியது பழையவை