அரிசி, சீனி மற்றும் பருப்பின் விலைகள் குறைப்பு!

சதொசவில் விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசி, சிவப்பு பருப்பு, வெள்ளை சீனி மற்றும் உளுந்து ஆகியவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சதொச தலைவர் தெரிவித்துள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இந்த விலைகள் குறைக்கப்படும் என சதொச தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 210 ரூபாயாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ வெள்ளை அரிசியின் விலை 185 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 200 ரூபாயாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை நாடு கிலோ ஒன்றின் விலை 194 ரூபாயாகவும் சிவப்பு பருப்பு ஒரு கிலோ 135 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை