இலங்கை இராணுவம் தொடர்பில் ஜெனிவா அதிரடி நடவடிக்கை

இலங்கை பாதுகாப்பு படையில் உள்ள 2 லட்சத்து 47ஆயிரம் பேரை பராமரிப்பதற்கு முடியாது என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.

இதனால் எண்ணிக்கையை உடனடியாக குறைக்குமாறும் ஜெனிவா மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மக்களுக்கு உணவு வழங்குவதற்கு வசதியில்லாத போது இராணுவத்தின் உணவு செலவு 10 கோடி ரூபாய் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.


தற்போது இடம்பெறும் 51 ஆவது ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்களுக்கமைய, அடுத்த வருடத்திற்கான இராணுவத்தினரின் செலவு 373 பில்லியன் ரூபாவாகும்.
இது இந்த ஆண்டை விட 14 சதவீதம் அதிகமாகும் எனவும் சுட்டிக்காடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பாதுகாப்புப் படைகளில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும்.

பாதுகாப்புச் செலவினங்களைக் குறைக்க வேண்டும் என்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை, இலங்கைக்கு பரிந்துரை செய்துள்ளது.

இலங்கையில் தற்போது அதிகரித்து வரும் நெருக்கடி நிலமைக்குள் அதிகளவான படையினர் உள்ளமையும் அவர்களுக்காக செலவிடப்படும் பணம் பற்றிம் சமீபகாலமாக விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் ஜெனீவா இவ்வாறானதொரு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

மேலும் யுத்தம் நிறைவடைந்த போதும் தற்போது வரை அதிகளவான படையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதுஅவுஸ்திரேலியா, பிரித்தானியா, கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜப்பான், மலேசியா, நெதர்லாந்து போன்ற நாடுகளை விடவும் இலங்கையில் இராணுவ ஆளணி வளம் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.
புதியது பழையவை