மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் மாபெரும் இரத்ததான முகாம்!

AMCOR நிறுவனத்தின் செயற்திட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் நடைபெற்று வரும் சமூகப் பொருளாதார அபிவிருத்தியும் பாதுகாப்பற்ற புலம்பெயர்தலை மட்டுப்படுத்தலும் எனும் செயற்திட்டத்தின் கீழ் தொழில் பயிற்சி பெற்றுவரும் இளைஞர் யுவதிகளின் சமூக வேலைத்திட்டத்தில் ஒன்றாக முன்னெடுக்கப்பட்ட மாபெரும் இரத்ததான முகாம் நேற்று (28) களுவாஞ்சிக்குடி தொழில் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.

AMCOR நிறுவனத்தின் அனுசரணையில் கல்முனை சென் ஜூடி துணை மருத்துவக் கல்லூரி தாதிய உதவியாளர்கள் மற்றும் முகாமைத்துவ உதவியாளர்கள் பயிற்சி பெற்றுவரும் இளைஞர் யுவதிகளின் ஏற்பாட்டில் குறித்த இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.

80 ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இரத்ததான முகாமில் 40 கொடையாளர்கள் குருதி வழங்கினர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப்பிரிவு வைத்தியர் தலைமையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் களுவாஞ்சிகுடி இரத்த வங்கிப்பிரிவு உத்தியோகத்தர்கள் இரத்ததானத்தில் கலந்து கொண்டு குருதிகளைப் பெற்றுக்கொண்டனர்.

இரத்ததான முகாமில் AMCOR நிறுவன சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் யோ.சிவயோகராஜன், AMCOR நிறுவன ஊழியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், பொதுமக்கள், இளைஞர் யுவதிகள் எனப்பலர் கலந்துகொண்டனர்.


புதியது பழையவை