அமரர் அருட் கலாநிதி அந்தனி ஜான் அழகரசன் அடிகளார் எழுதிய மூன்று நூல்கள் மட்டக்களப்பில் வெளியீட்டு நிகழ்வு

அமரர் அருட் கலாநிதி அந்தனி ஜான் அழகரசன் அடிகளார் அவர்கள் தனது இவ் உலக வாழ்வின் நிறைவு நாட்களில் எழுதிய மூன்று நூல்களின் வெளியீடும் மற்றும் போதகர் இராசப்பா அவர்களினால் எழுதி மெட்டமைக்கப்பட் ‘தேவனை தேடும் ராகங்கள்’ என்னும் இறுவெட்டும் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதியொன்றின் மண்டபத்தில் அருட்பணி. ம.யூட் சுதர்சன்( முன்னை நாள் அதிபர் கிறிஸ்தவ இறையியல் கல்லூரி,சுண்ணாகம், யாழ்ப்பாணம்) அவர்களின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

அமரர் அருட் கலாநிதி அந்தனி ஜான் அழகரசன் அடிகளார் அவர்கள் தனது இவ் உலக வாழ்வின் நிறைவு நாட்களில் எழுதிய 'நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு எனும் நூலும் ,அன்னாரினால் 1972 ஆண்டு நம் நாட்டின் நிலை கருதி அன்று எழுதப்பட்டு வெளியிடப் பட்ட 'புரட்சிக் கிறிஸ்து' எனும் நூலினை இன்றைய தேவை கருதி இரண்டாம் முறையாகவும் , அத்தோடு 'அவரின் திராட்சைத் தோட்டத்தில்' எனும் புத்தகமும் (
இது ஒரு கத்தோலிக்கக் குருவாக தனது வாழ்க்கை பயணத்தையும் குருத்துவப் பயணத்தையும் பதிவிடும் முகமாக அன்னாரினால் எழுதப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் இளைய சகோதரரான கவிஞர் முகில் வாணன் எனும் புனை பெயரையுடைய போதகர் இராசப்பா அவர்களினால் எழுதி மெட்டமைக்கப்பட்டு பதிவிடப்பட்ட'தேவனைப் தேடும் ராகங்கள்' எனும் இறுவெட்டுடினையும் இவர்களின் மருமகனான அருட்பணி.ஞானராசா மனோரூபன்(முகாமைக்குரு, புனித.அந்திரேயா, ஆலயம், மட்டக்களப்பு)அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது .

இதற்கு அனுசரணையையும் ஆலோசனையையும் கவிஞர் முகில் வாணன் எனும் புனை பெயரையுடைய போதகர். இராசப்பா அவர்கள் வழங்கியிருந்தார்.

இந் நிகழ்வில் ஆரம்ப மன்றாடலினை போதகர் இராசப்பா அவர்களும் வாழ்த்துரையினை அருட்பணி. N.அருள்நாதன்(அதிபர், இலங்கை இறையியல் கல்லூரி, பிலிமத்தலாவை) அவர்களும், ஆசியுரையினை அதி.வண.டிலோறாச் றஞ்சித் கனகசபை(ஓய்வு நிலை ஆயர்,கொழும்பு மறைமாவட்டம் இலங்கைத் திருச்சபை) அவர்களும் ,வரவேற்பு நடனத்தினை கொம்மாதுறை விஞ்ஞான போதனா நிலைய மாணவிகளும் வழங்கியிருந்தனர்.

வரவேற்புரையை போதகர்.கணபதிப்பிள்ளை சகாயதேவன்(அன்னாரின் பெறாமகன்)அவர்களும் முதற்பிரதியினை மகேந்திரன் சற்குணம் தயாராஜ்( சிரேஷ்ட விரிவுரையாளர்,வர்த்தக பீடம்,வந்தாறுமுலை) அவர்களும் பெற்றுக்கொண்டனர்.

சிறப்புப் பிரதிகளை அருட்பணி.ரி.ஏ.தகருக்குமார்( பணி முதல்வர் கிழக்குப் பிராந்தியம் , இலங்கைத் திருச்சபை) திருமதி.ரேக்கா நிருபன்(கிறிஸ்தவ சமய விவகாரங்களுக்கான உத்தியோகத்தர்,கச்சேரி,மட்டக்களப்பு),அருட்பணி.ம.யூட் சுதர்சன்( முன்னை நாள் அதிபர், கிறிஸ்தவ இறையியல் கல்லூரி, சுண்ணாகம், யாழ்ப்பாணம்)                               அருட்பணி சா.சுரேஷ் குமார்( புதிய ஏற்பாட்டை விரிவுரையாளர்,  இலங்கை இறையியல் கல்லூரி, பிலிமத்தலாவை),தமிழ் துறைப்பேராசிரியர். மா.ரூபவதனன்(முதுநிலை விரிவுரையாளர் ,துறைத்தலைவர் பொதுசன நிர்வாகத்துறை, ஊவா வெல்லஸ்ஸ, பல்கலைக்கழகம், பதுளை) ஆகியோரும் பெற்றுக் கொண்டனர். 

இந் நிகழ்வில் நூல்களுக்கான ஆய்வுரையினை அருட்பணி.சா.சுரேஷ் குமார் (புதிய ஏற்பாட்டை விரிவுரையாளர், இலங்கை இறையியல் கல்லூரி, பிலிமத்தலாவை)      அவர்களும். நூல்களுக்கான கருத்துரையினை தமிழ்த் துறைப் பேராசிரியர்.மார்க்கண்டேயன் ரூபவதனன் அவர்களும், ஏற்புரையினை போதகர்.இராசப்பா(கவிஞர் முகில் வாணன்)அவர்களும், நன்றியுரையினை  திருமதி.கொறினா ஜேசுதாஸ்(அன்னாரின் பெறாமகள்) அவர்களாலும் நிகழ்த்தினார்கள். 

இந் நிகழ்ச்சியினை அருட்பணி.நேசராசா சபிலாஷ் (வாலிப சங்கப் பொறுப்பமைக் குரு கிழக்குப் பிராந்தியம், இலங்கைத் திருச்சபை)தொகுத்து வழங்கினார்.

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு' என்னும் நூல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர, உயர் தர மாணவர்களுக்கு உதவக்கூடியது எனவும்,
'புரட்சிக் கிறிஸ்து' எனும் நூல் கிறிஸ்தவ டிப்லோமா கற்கையை மேற்கொள்ளும் மாணவர்களுக்கும் உகந்தது எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

எனவே இன் நூல்கள் தேவையானவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளவும். தொடர்புக்கு.

அருட்பணி.ஞா.மனோரூபன்
தொ.பே.இல
0778836897

புதியது பழையவை