மனைவியை கொடூரமாக தாக்கும் கணவன்

மனைவியை கணவன் வீதியில் இழுத்துச் சென்று கொடூரமாக தாக்கும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வீதியில் இழுத்துச் சென்ற மனைவியை பல முறை மின் கம்பத்தில் தலையை மோத குறித்த நபர் முற்பட்டுள்ளார்.

திருகோணமலை மாவட்டம் மூதூர் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி பிரதேசத்தில் இந்த சம்பவம் (28) இடம்பெற்றுள்ளது.

தாக்குதல் இடம்பெற்றவேளை பெருமளவிலான மக்கள் சம்பவத்தை வேடிக்கை பாரத்தபோதிலும் தாக்குதலுக்கு இலக்கான பெண்ணை, காப்பாற்ற எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.

இந்த சம்பவத்தை அருகில் இருந்த ஒருவர் தனது கைபேசியில் பதிவு செய்துள்ளார். தாக்குதலுக்கு உள்ளான பெண்ணின் கணவர் மூதூர் காவல்துறையினரால் (29)பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதியது பழையவை