மகாராணி எலிசபெத் அவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இரங்கல் செய்தி

மாட்சிமை தங்கிய மகாராணி இரண்டாம் எலிசபெத்! ஐக்கிய இராச்சியம் மற்றும் பொதுநலவாய நாடுகளின் அரசியாக நீண்ட காலம் ஆட்சி செய்த பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது 96 வயதில், 8 ம் திகதி செப்டம்பர் 2022 அன்று ஸ்கொட்லாந்திலுள்ள பால்மோரல் கோட்டையில் காலமான செய்தி கேட்டு ஈழத் தமிழர்களாகிய நாம் ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம்.

இவரது மரணம் தொடர்பாக அதிகாரபூர்வமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினர் ஆகிய நாம் ஈழத் தமிழர்கள் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

பிரித்தானியாவின் செல்வாக்கு சரிந்திருந்த நிலையில், அடையாளம் தெரியாத அளவுக்கு சமூகம் மாறி, முடியாட்சியின் தேவையே கேள்விக் குள்ளாகிப்போன நிலையில், எவரும் ஊகித்துக் கூட பார்த்திருக்காத வேளையில், தனது மக்களுக்காகவும், முடிசூடிய அரியணைக்காகவும் தனது வாழ்வை அர்ப்பணித்து உறுதியோடும், கடமை உணர்வோடும், கண்ணியத்தோடும் முடியாட்சியை வெற்றிகரமாக இவர் கையாண்ட தனிச்சிறப்பு, மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் நீண்ட நெடிய ஆளுகையின் அடையாளமாகும்.

இது போன்ற சிறப்பம்சங்களால் இவர் தீவிரமாக மாறிவந்த உலகில் ஒரு மாறாத புள்ளியாக விளங்கினார். அவரது அரசாட்சிக் காலம் தொடங்கியபோது இருந்த அளவுக்கு அந்த அரசாட்சி முடிந்த போது முடியரசு வலிமையாக இல்லாமல் போயிருக்கலாம். ஆனால், பிரித்தானிய மக்களின் இதயத்தில் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய வரலாற்றுக் குறியீடாக அது பதியப்பட்டு, அவர்கள் மனங்களில் ஓர் மறக்கமுடியாத மாண்புமிகு மகாராணியாக இவர் நிலைபெற்றுள்ளார்.

இருந்தபோதும், ஐக்கிய இராச்சியத்தில் வாழும் ஈழத்தமிழர்களைச் சமஉரிமை உள்ள குடிமக்களாக வாழவைத்துள்ளது போல், இலங்கையின் அரசாட்சி 1948 இல் பிரித்தானிய அரசினால்
இனவாத சிங்கள அரசிடம் ஒப்படைக்கப்பட்டதிலிருந்து, இன்றுவரை அடிமைப்பட்டு வாழும் ஈழத் தமிழர்களும் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்ற மக்களாக வாழக் காத்திரமான நடவடிக்கைகளை, அடுத்து முடிசூடியுள்ள பிரித்தானிய அரச குடும்ப வாரிசு 3வது சார்ள்ஸ் மன்னர் தார்மீகக் கடமையுடன் மேற்கொள்வார் எனும் நம்பிக்கையுடன் எமது காத்திருக்கின்றனர். 

மக்கள் இன்றும்
காத்திருப்புகளோடு, மகாராணியின் இழப்பால் மீளாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அரச குடும்பத்தினர், பிரித்தானிய மக்கள் அனைவரோடும், தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையின ராகிய நாம், எமது ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்து கொள்கின்றோம். 

மக்களுக்காக வாழ்ந்த மகாராணியைச் சாவு என்றும் அழித்துவிடப் போவதில்லை, பிரித்தானிய தேசத்தின் ஆன்மாவில் மாறாத புகழோடு இவர் என்றும் வாழ்வார்.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
அரசியற்துறை
தமிழீழ விடுதலைப் புலிகள்.


புதியது பழையவை