பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கக் கோரி மேற்கொள்ளப்படும் முழு நாடு தழுவிய ஊர்தி வழி கையெழுத்து போராட்டம் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு பதுளை மாநகரை வந்தடைந்தது.
கையெழுத்துகள் மக்களிடம் பெறப்பட்டன. மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.