டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவும் விகிதம்  அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் செப்டெம்பர் மாதத்தின் இதுவரையிலான காலப் பகுதியில் 231 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் மாத்திரம் 43 ஆயிரத்து 813பேர் டெங்கு நோயினால்  பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் செப்டெம்பர் மாதத்தின் கடந்த ஆறு நாட்களில் யாழ் மாவட்டத்தில்   அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவு  செய்யப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேல் மாகாணத்தில் 40 தசம் 8 வீதமான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை  நாட்டின் பல பகுதிகளில்  மழையுடனான  காலநிலை நிலவி வருவதால் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை