உரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தில் 08 கஜமுத்துக்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபா என பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
ஊரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.