மட்டக்களப்பு வெல்லாவெளி சுகாதாரப்பிரிவில் கர்பிணித் தாய்மார்களுக்கான சத்துணவு வவுச்சர் வழங்கல்

மட்டக்களப்பு வெல்லாவெளி சுகாதார வைத்திய அலுவலகத்தில் ‘கோயோ’ நிறுவனத்தினால் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சத்துணவு வவுச்சர் வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று(20) நடைபெற்றது.

போரதீவுப்பற்று பிரதேசத்தில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷாக்கான மட்டத்தை அதிகரிப்பதற்கான சத்துணவு ஐந்தாயிரம் ரூபா பெறுமதியான வவுச்சர்கள் வழங்கப்பட்டன.

‘பவுச்சர் செயா மைக்ரோ கிரடிட் லிமிடெட்’ நிதி அனுசரணையுடன் கோஜோ(GOJO) அறக்கட்டளை ஜப்பான் நிறுவனத்தினால் போரதீவுப்பற்று வெல்லாவெளி சுகாதார வைத்திய அலுவலகத்துக்குட்பட்ட 346 கர்பிணி தாய்மார்களுக்கு 5000 ரூபாய் பெறுமதியான சத்துணவு வவுச்சர் வழங்கி வைக்கப்பட்டது.

வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.விவேகாந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் யோ.ரஜனி போரதீவுப்பற்று பிரதேச செயலக உதவி செயலாளர் – சேயா நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் ஏ. சந்திரகுமார் மற்றும் வெல்லாவெளி சுகாதார வைத்திய பரிசோதகர் அலுவலக தாய் சேய் உத்தியோகஸ்தர்கள் மற்றும் போரதீவுப்பற்று வெல்லாவெளி சுகாதார வைத்திய பிரிவுக்குட்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
புதியது பழையவை