மட்டக்களப்பு மாவடிச்சேனை அஹமட் ஹிராஸ் வீதியைச்சேர்ந்த 48 வயதுடைய இப்றா லெப்பை கலீல் என்பவர் கடலில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.
நேற்று வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடிக்காக மூவர் சென்ற நிலையில் இன்று அதிகாலை குறித்த நபர் கடலில் வீழ்ந்து மரணமடைந்ததாக இவருடன் பயணித்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சடலம் கடலிலிருந்து மீட்கப்பட்டு வாழைச்சேனை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் பொலிஸ் உத்தரவின் பேரில் அகீல் அவசர சேவை வாகனத்தின் உதவியுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி நு.சகாப்தின் சடலத்தைப் பார்வையிட்டு அறிக்கையை பெற்றுக்கொண்டார்.
மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.