மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிசாரின் ஏற்பாட்டில் - மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்



மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிசாரின் ஏற்பாட்டில் களுவாஞ்சிகுடி சக்தி இல்ல மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் உணவு வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. 

தேசிய பொலிஸ் வாரத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் உணவு வழங்கப்பட்டது.

பொருட்கள் கையளிக்கும் நிகழ்வில் களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நிதிமன்ற நீதிபதி ரஞ்ஜித்குமர், மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ்மா அதிபர் சரத்குமார, மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகதபால, சிஸே;ட பொலிஸ் அதிகரி குமாரசிறி, களுவாஞ்சிகுடி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜெயரெத்ன, களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி அபயவிக்கிரம, களுவாஞ்சிகுடி உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.த.சத்தியகௌரி, பிரதேச சபை தவிசாளர் ஞா.யோகநாதன், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் உளநல வைத்தியர் யூடி,உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கைப் பொலிசாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் நெருங்கிய உறவைப் பேணுவதை நோக்காகாக் கொண்டு பொலிஸார் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதாக மட்டக்களப்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் சரத் குமார தெரிவித்தார்.
புதியது பழையவை