நாட்டில் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி சூடு - இருவர் பலி

நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் வெவ்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி பேலியகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பேலியகொட ரயில் வீதி குருகுல வித்தியாலத்திற்கு அருகில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை களனி – பட்டிய சந்தியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த துப்பாக்கி பிரயோகம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை