தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் தலை­வர் காணிக்கு - வல்வெட்டித்துறை நகரசபையால் சிவப்பு எச்சரிக்கை!

தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் தலை­வர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரன் பிறந்த வல்­வெட்­டித்­துறைப் பகு­தி­யில் அமைந்­துள்ள அவ­ரது வீட்­டுக் காணிக்கு வல்­வெட்­டித்­துறை நகர சபை­யால் சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த ஆத­னம் எவ­ரா­லும் பரா­ம­ரிப்­பற்ற நிலை­யில் இருப்­ப­த­னால் நுளம்பு பெரு­கும் இடங்­க­ளாக கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­மை­யால் இந்த ஆத­னத்­தின் உரி­மை­யா­ளர் அல்­லது பரா­ம­ரிப்­பா­ளர், எவ­ரும் இருப்­பின் உட­ன­டி­யாக துப்­ப­ரவு செய்து நுளம்பு பெரு­கும் இடங்­கள் இல்லை என்­பதை உறு­திப்­ப­டுத்தி 22ஆம் திக­திக்­குள் 0212263973 எனும் தொலை­பேசி இலக்­கத்­துக்கு தெரி­யப்­ப­டுத்­த­வும்.

இல்­லை­யெ­னில் இவ்­வ­றி­வித்­தலை அலட்­சி­யம் செய்­யும் பட்­சத்­தில் இந்த ஆத­னம் எம்­மால் பொறுப்­பேற்­க­ப­டும்’ என தெரி­வித்து வல்­வெட்­டித்­துறை நக­ர­ச­பைத் தவி­சா­ள­ரால் சிவப்பு எச்­ச­ரிக்கை காட்­சிப்­ ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.
புதியது பழையவை