சாரதியின் உறக்கத்தால் வீதியை விட்டு விலகிய வேன்

கண்டியிலிருந்து மாத்தளை நோக்கிப் பயணித்த வேன் ஒன்று அக்குறணை நகரில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பாதசாரிகள் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த 70 வயதுடைய பாதசாரி ஒருவர் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேன் திடீரென வீதியின் வலது பக்கம் நகர்ந்து 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் போக்குவரத்து அடையாளத்துடன் மோதியது.

தம்புள்ளை பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய சாரதி உறங்கியமையால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை அலவத்துகொட பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை