அரச உத்தியோகத்தர்களுக்கான புதிய சுற்றறிக்கை வெளியீடு

அரச உத்தியோகத்தர்கள் கடமை நேரங்களில் பொருத்தமான ஆடைகளை  அணிவது தொடர்பில் புதிய சுற்றறிக்கை  வெளியிடுவதற்கு    பொதுநிர்வாக,  அமைச்சு  தீர்மானித்துள்ளது.

பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான சுற்றறிக்கையை தயாரிப்பதற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அரச நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள்   பொருத்தமான உடைகளை அணிவது தொடர்பில் முன்னதாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
புதியது பழையவை