வெளியானது முக்கிய சுற்றறிக்கை

அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயதை 60ஆக குறைப்பது தொடர்பான சுற்றறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னேவின் கையொப்பத்துடன் குறித்த சுற்றறிக்கை வெளியாகியுள்ளது. 

இடைக்கால வரவு செலவு திட்ட முன்மொழிவின்படி, அரச ஊழியர்களின் ஓய்வு வயதை 60ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 18,000 முதல் 20,000 வரையிலான அரச ஊழியர்கள் ஓய்வு பெறுகின்றனர்.

இதேவேளை புதிய சுற்றறிக்கை மூலம், ஓய்வு பெறுவோர் எண்ணிக்கை இரு மடங்காக உயரும் என பொது நிர்வாக அமைச்சகத்தின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.





புதியது பழையவை