மட்டக்களப்பு - மண்டூர் முருகன் ஆலயத்தை நோக்கிய பாதயாத்திரை

கிழக்கிலங்கையின் வரலாற்று பிரசித்தி பெற்ற சின்னக்கதிர்காமம் என அழைக்கப்படும் மண்டூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பமாகியுள்ளதையடுத்து பக்தர்கள் பாதயாத்திரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றைய தினம் காரைதீவு மாவடி சிறி கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

இவ் பாத யாத்திரை நற்பிட்டிமுனை அருள்மிகு அம்பலத்தடி பிள்ளையார் ஆலயத்தை வந்தடைந்ததும் விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றதுடன் அடியார்களுக்கான காலை உணவும் வழங்கப்பட்டது.

காரைதீவிலிருந்து ஆரம்பித்த பாதயாத்திரை கல்முனை நகர், கிட்டங்கி,நாவிதன்வெளி,வேப்பையடி ஊடாக மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தை சென்றடையும்.

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் எதிர்வரும்
10ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
புதியது பழையவை