கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரைக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் 7 பேரில் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த சிறுவர்களே இன்று (07)குளிக்கச் சென்றுள்ளனர்.
இதன்போதே 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளான். இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போன சிறுவன் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

