இலங்கையும் இந்தியாவும் சூரிய மின் உற்பத்தி திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்

மேற்கூரைகளில் சூரியக் கலங்களை பொருத்தும் வேலைத்திட்டத்திற்கு இந்திய அரசாங்கத்தினால் 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனானது வழங்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரான காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்கள், வைத்தியசாலைகள், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள், அரச கட்டிடங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் என்பனவற்றில் பொருத்துவதற்கு இந்த கடனானது பயன்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம், இலங்கை நிலையான எரிசக்தி அதிகாரசபை மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவற்றின் அதிகாரிகளுடன் கடன் திட்டத்தின் முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை