இலங்கை காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களான கஜன் சுலக்சன் ஆகியோரின் ஆறாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம்(20-10-2022) யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் கடைப்பிடிக்கப்பட்டது.
இதன்போது யாழ் பல்கலைக்கழகத்தில் கஜன் மற்றும் சுலக்சனின் உருவப்படத்திற்கு மாணவர்களால் ஈகைச்சுடரேற்றப்பட்டதோடு மலரஞ்சலி செலுத்தி அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

