திருகோணமலை - அனுராதபுரம் பிரதான வீதியில் துவரங்காடு சந்தியில் இன்று ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் பலத்த காயமடைந்துள்ளனர்.
சீமெந்து ஏற்றி வந்த பாரிய கொள்கலன் தாங்கி ஊர்தி ஒன்று வீதியில் நின்றுகொண்டிருந்த மாடுகளுக்கு ஏற்படவுள்ள விபத்தை தவிர்க்க முயற்சி எடுத்த வேளை வீதியை விட்டு விலகி அங்கிருந்த அதி உயர் மின்னழுத்த மின்கம்பத்தில் மோதியதன் காரணமாக இவ்விபத்து சம்பவித்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த இருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தின் காரணமாக மின்கம்பம் மற்றும் மின் கம்பிகள் சேதமடைந்ததால் திருகோணமலையின் பல பகுதிகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலை உப்புவெளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.