இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, பெட்ரோல் 92 இன் விலை லீட்டருக்கு 40 ரூபாயும், பெட்ரோல் 95 இன் விலை லீட்டருக்கு 30 ரூபாயும் குறைக்கப்படுவதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், பெட்ரோல் 92 இன் புதிய விலை 410 ரூபாவாகவும், பெட்ரோல் 95 இன் புதிய விலை லீட்டருக்கு 510 ரூபாவாகவும் குறைவடையவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் செய்தி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.