கடற்றொழிலாளர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கடற்றொழிலில் ஈடுபட வேண்டாமென கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பிலான அறிவித்தல் ஊடாக வளிமண்டலவியல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

குறித்த கடற்பிராந்தியங்களில் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 60 தொடக்கம் 70 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலி முதல் புத்தளம் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பிராந்தியங்களில் இடைக்கிடையே 50 தொடக்கம் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இதற்கமைய, காலி முதல் கொழும்பு ஊடாக மன்னார் வரையான கடற்பிரதேசங்களில் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
புதியது பழையவை