மட்டு - போரதீவுப்பற்று பிரதேசத்தில் காட்டுயானைகளின் அட்டகாசம்

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட சின்னவத்தை தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்தில் இன்று (13)அதிகாலை காட்டு யானை வீட்டு வளாகத்தில் உட்புகுந்து அங்குள்ள நெல் மூடைகள் மற்றும் தோட்ட பயிர்கள் கட்டடங்களை சேதப்படுத்தி சென்றுள்ளது.

இதனால் அப்பிரதேசங்களில் வாழும் மக்கள் பெரும் அச்சத்துடன் வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

பிரதேசத்தில் காட்டில் வாழும் யானைகள் கிராமங்களுக்குள் உட்பிரவேசிப்பதை உரிய அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்காவிடின் மக்களின்  உயிர்களை பறிகொடுக்கும் நிலை ஏற்படலாம் எனவும் பிரதேசவாசிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.



புதியது பழையவை