மட்டக்களப்பில் - வயோதிப பெண்ணொருவர் தாக்கப்பட்டு கொலை

மட்டக்களப்பு கல்குடா பட்டியடிச்சேனை பகுதியில் வயோதிப பெண்ணொருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம்
உயிரிழந்த பெண்ணின் மகன் மற்றும் தமக்கையின் மகன் ஆகியோருக்கு இடையில் நேற்று(24) பகல் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று(25) முன்னெடுக்கப்படவுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை வாழைச்சேனை நீதவான் முன்னிலையில் இன்று(25) முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை