சாய்ந்தமருது கடலில் மிதந்துவந்த பெண் ஆசிரியரின் சடலம்

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது கடலில் மிதந்துவந்த பெண் ஆசிரியரின் சடலம் சிறிலங்கா கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரான ஆசிரியரான ஆறுமுகம் வனிதா( வயது 53) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

முன்னதாக நேற்றையதினம் பெண்ணின் சடலமொன்று சாய்ந்த மருது கடலில் மிதந்த நிலையில் கடற்படையினரால் மீட்கப்பட்டிருந்தது. 

குறித்த சடலத்தை அடையாளம் காண உதவுமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதற்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற ஆசிரியர்களின் உறவினர்கள் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளனர்.

இம்மரணம், தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்படவுள்ளது.
புதியது பழையவை