எரிபொருள் விலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்

எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இன்றைய தினம் (01-10-2022)  எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு மாதமும் முதலாம் மற்றும் 15ஆம் திகதிகளில் எரிபொருள் விலையை மாற்றியமைக்க அரசாங்கம் கொள்கை தீர்மானம் எடுத்துள்ளது.

இதேவேளை, உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் தற்போது மிகவும் குறைந்த மதிப்பை எட்டியுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், இன்று மேற்கொள்ளப்படவுள்ள எரிபொருள் விலைத் திருத்தத்தின் பிரகாரம் எரிபொருட்களின் விலை குறைவடையும் என நுகர்வோர் எதிர்பார்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதியது பழையவை