தனிப்பட்ட துப்பாக்கிகளுக்கான உரிமங்களை புதுப்பிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு

அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31, 2022 க்கு இடையில் தனிப்பட்ட துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் அல்லது தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தங்கள் உரிமங்களை புதுப்பிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

டிசம்பர் 31 க்குப் பின்னர் உரிமங்கள் புதுப்பிக்கப்படாது என அமைச்சு தெரிவித்துள்ளது.

“செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் துப்பாக்கியை வைத்திருக்கும் மற்றும் இயக்கும் எவருக்கும் துப்பாக்கிகள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 22 இன் படி அபராதம் விதிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப் படிவங்கள் இப்போது பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.defence.lk பெற்றுக்கொள்ளலாம்.
புதியது பழையவை