சீமெந்தின் விலையில் சிறிய மாற்றம்

சங்ஸ்தா சீமெந்து மூடை ஒன்றின் விலையை குறைத்துள்ளததாக அதன் உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் படி, சங்ஸ்தா சீமெந்து மூடை ஒன்றின் விலையை 100 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளது.

இந்த விலை குறைப்பானது இன்று (04) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கட்டட நிர்மாணத்துறையை முன்கொண்டு செல்லும் நோக்கில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ப்படுகின்றது.

இதன்படி, 3,200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் 50 கிலோகிராம் சங்ஸ்தா சீமெந்து மூடை ஒன்று, 3,100 ரூபாவாக விலை குறைத்துள்ளது.
புதியது பழையவை