பதுளை மாவட்டம் 2ஆம் பிரிவு,ரொசட் , ஹாலி எல தோட்டத்தில் லண்டன் வோள் தஸ்ரோ கற்பகவிநாயகர் ஆலயத்தினால் " கற்பக விநாயகர்" அறநெறிப்பாடசாலையில் நேற்று (08-10-2022) சிறுவர் தின நிகழ்வும், வாணி விழாவும் சிறப்பான முறையில் இடம் பெற்றன.
இந் நிகழ்வில் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கும் வைபவம் இடம் பெற்றன.
நிகழ்வானது இலங்கைக்கான அகிலன் பவுண்டேசன் முகாமையாளர் வி.ஆர். மகேந்திரன்(JP) தலைமையில் இடம்பெற்றது.








