தவிசாளரை பதவியிலிருந்து நீக்குமாறு நாவிதன்வெளி பிரதேசசபை உறுப்பினர்கள் கோரிக்கை

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேசசபையின் தவிசாளரை பதவியிலிருந்து நீக்கி, வேறு புதிய தவிசாளரை நியமிக்க நடவடிக்கையெடுக்குமாறு நாவிதன்வெளி பிரதேசசபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டு.ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளனர். 

இவ்விடயம் தொடர்பில் நாவிதன்வெளி பிரதேசசபை உறுப்பினர் திருமேனி யோகநாயகன் கருத்து தெரிவிக்கையில், 

மக்கள் பிரதிநிதிகளான பிரதேச சபை உறுப்பினர்களாகிய எம்மால் முன்வைக்கப்பட்ட நியாயமான கோரிக்கைகள் வேண்டுமென்றே தவிசாளரினால் தொடர்ந்து அலட்சியம் செய்யப்பட்டு வருகின்றது.

அத்துடன் சபையால் எடுக்கப்படும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படாமல் வேண்டுமென்று அலட்சியம் செய்யப்படுவதுடன் சபையில் எடுக்கப்படாது உட்புகுத்தப்படும் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காக சபை நிதி பயன்படுத்தப்படுகின்றது.


எனவே உள்ளூராட்சி அமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் இவ்விடத்தில் தலையீடு செய்து 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டம் பிரிவு 185(1)(அ),(ஆ),(இ) ஆகிய பிரிவுகளின் பிரகாரம் தவிசாளரான  அமரதாச ஆனந்த தவிசாளர் பதவியிலிருந்து அகற்றுமாறு ஊடகங்கள் வாயிலாக கேட்டுக்கொள்கின்றோம் என்றார். 

இந்த ஊடக சந்திப்பின்போது நாவிதன்வெளி பிரதேசசபை உறுப்பினர்களான அந்தோனி சுதர்சன்,முகமட் இஸ்மாயில் முகமட் ஜகான், தர்சினி நாகேந்திரன் ஆகியோரும் இதன்போது கருத்து தெரிவித்தனர்.
புதியது பழையவை