இன்று சூரியகிரகணம் - தோஷநட்சத்திரங்களும்

சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வந்து (அமாவாசை காலத்தில்) பூமியிலுள்ளவர்களுக்கு சூரியனை மறைக்கும் தோற்றம்.

சூரிய விம்பத்தின் ஒரு பாகத்தை மறைக்கும் தோற்றம் பார்சுவ சூரிய கிரகணம் ஆகும். சூரியகிரகணம் இலங்கையில் கிரகணம் பற்றிய படியே சூரியன் அஸ்தமனமாகும்.

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 08 ம் நாள் (25.10.2022) செவ்வாய்க்கிழமை மாலை 5.28 மணிக்கு ஆரம்பித்து 6.28 வரை கிரகணம் பிடிக்கும். சுவாதி நட்சத்திரத்தில் கிரகணம் பிடிக்கும்

கிரகண தோஷ நட்சத்திரங்கள் திருவாதிரை, சித்திரை 03ம்,04ம் பாதம்,சதயம்,பூரட்டாதி04ம்

பாதம், உத்தரட்டாதி, ரேவதி, விசாகம் 1,2,3ம் பாதங்கள், கிரகணம் நடைபெறும் 25.10.2022 அன்று பகல் 12.00 மணிக்குமுன் உணவு உண்ண வேண்டும்

பின் இரவு 7.00 மணிக்கு பின் புதிய உணவுகள் சமைத்து உண்ண வேண்டும். பகல் 12.00 - இரவு 7.00 மணி வரை நீர்குடல்களில் துளசி அல்லது அறுகு தெர்ப்பை புல் என்பன இட்டு வைத்தல் வேண்டும்.

25.10.2022 காலை முதல் மறுநாள் காலை வரை வழமையான உணவுகளில் அரை பங்கு எடுத்தல் ஜீரண செயற்பாட்டிற்கு நன்மை தரும்.அன்று அசைவ உணவுகள், தையல் இயந்திரம் போன்ற இயந்திர செயற்பாட்டை நிறுத்துதல். முகசவரம், முடிவெட்டுதல் என்பன தவிர்த்தல், கிரகண கால நித்திரை செய்தல் தவிர்த்து மந்திர உபாசனைகள். தேவாரம்,தோத்திரம் படிக்கலாம்.

கர்ப்பிணிப் பெண்கள். சிறுவர்கள் வயதானவர்கள் சிறிய ஆயுதம் மூலம் வேலை செய்வதை தவிர்க்கவும்.

ஆலயங்களில் 25.10.2022 அன்று பகல் 12.00 மணிக்கு முன் பூஜைகள் நடாத்த வேண்டும். இரவு 7.00 மணிக்கு பின் ஆலயத்தை சுத்தம் செய்து நித்திய பூஜைகள் செய்ய வேண்டும். அமாவாசை சிரார்த்தம் செய்பவர்கள் 26.10.2022 அன்று செய்யலாம்.
புதியது பழையவை