அம்பாறை - சாய்ந்தமருதில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

அம்பாறை - சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை பிரதேசத்தில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று (03.10.2022) நடந்துள்ளது.
40 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய சம்பவ இடத்துக்குச் சென்ற சாய்ந்தமருது பொலிஸார் கல்முனை கடற்படையினருடன் இணைந்து கடலில் மிதந்த சடலத்தை மீட்டுள்ளனர்.

எனினும் சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என்பதுடன் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கல்முனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காணாமல்போனவர்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்கியிருந்தால் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களைப் பொலிஸார் கேட்டுள்ளனர்.
புதியது பழையவை