கொழும்பில் வசிப்போருக்கு விசேட எச்சரிக்கை

கொழும்பில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் பொலிஸார் சென்று அங்குள்ளவர்களின் தனிப்பட்ட விபரங்களை சேகரிப்பதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கனேசன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்த செயற்பாட்டுடன் தாம் உடன்பட முடியாது எனவும் அவ்வாறான தகவல்களை வழங்க வேண்டாம் எனவும் மக்களுக்கு அறிவித்துள்ளார்.

காவல் துறையினர் தகவல்களை சேகரிப்பதற்கு அதிகாரம் இருந்தாலும், இயல்பு நிலைகளின் போது இதனை பயன்படுத்த முடியாது. இது ஒரு சமாதான காலம் எனவே இது போன்ற மக்களுக்கு பீதியினை ஏற்படுத்தக் கூடிய விடயங்கள் இடம்பெறக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

நான் இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சிடம் கேட்டபோது அவர் இது தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது எனவும் குறிப்பிட்டார்.
புதியது பழையவை